தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் கிருஷ்ணாவுக்கும், பிரபல நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஷாலின் திருமணம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது.
நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அது காதல் திருமணம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், மணப்பெண் யார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
24
விஷால் சாய் தன்ஷிகா காதல்
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சாய் தன்ஷிகாவும் நடிகர் விஷாலும் ஒன்றாகக் கலந்துகொண்னர். இவ்விழாவில் பேசிய தன்ஷிகா, இதற்கு மேல் மறைக்க முடியாது. நாங்கள் இருவரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம் என்று அறிவித்தார்.
"விஷாலை எனக்கு 15 வருடங்களாக எனக்குத் தெரியும். எனக்கு ஒருநாள் என் வீட்டுக்கே வந்தார். யாரும் என்னிடம் அதுமாதிரி இருந்ததில்லை. எங்கள் நட்பு திருமணத்தை நோக்கிச் செல்வதாக இரண்டு பேருமே உணர்ந்தோம். அதனால்தான் கல்யாணம் செய்துகொள்ளலாம் என முடிவு எடுத்திருக்கோம்." என்று தன்ஷிகா பேசினார்.
34
திருமணம் எப்போது?
சாய் தன்ஷிகா, 'பேராண்மை', 'பரதேசி', 'கபாலி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரும் விஷாலும் சில மாதங்களாக காதலித்து வருவதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்போது அது உறுதியாகத் தெரியவந்துள்ளது.
நடிகர் விஷால் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வதாக முன்பு கூறியிருந்தார். தற்போது கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு விஷால் மற்றும் சாய் தன்ஷிகா ஆகியோரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.