நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு திருமணமா..? சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவும் தகவல்!

First Published | Feb 28, 2021, 11:12 AM IST

கோலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா லவ் மேட்டர். 
 

சினிமா ரசிகர்களின் மனதில் ராணியாக அமர்ந்திருக்கும் நயனுக்கு காதல் தோல்விகள் தான் வெற்றிப் படிக்கட்டுகளாக மாறி உச்சத்தில் அமர வைத்தது என்றால் பொய் அல்ல.
முதலில் “வல்லவன்” படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வசப்பட்டார் நயன்தாரா. ஜோதிகா - சூர்யா மாதிரி அடுத்த நட்சத்திர ஜோடி தயாராகிவிட்டார்கள் என ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சிம்பு-நயன் அந்தரங்க படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. அவற்றை எல்லாம் சிம்பு தான் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சிக்கலை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்தார்.
Tap to resize

அதன்பின்னர் பிரபுதேவா - நயன்தாரா காதல் கதை ஊர் அறிந்த செய்தி. இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபுதேவாவை மணப்பதற்காக மதம் மாறி காத்திருந்தார் நயன்தாரா. ஆம்... கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவா - நயன்தாரா திருமண ஏற்பாடுகள் கூட மும்பையில் நடைபெற்று வந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரபுதேவா நயன்தாராவை பிரிந்தார்.
2017ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்கவிருந்த படம் “கருப்புராஜா வெள்ளை ராஜா“. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை பிரபுதேவா மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இப்படி அடுத்தடுத்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நயன் - விக்கி திருமணம் குறித்து வெளியான தகவல்கள் வதந்தியாகவே கடந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் இவர்களது திருமணம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், நயன்தாரா - விக்னேஷ் சிவனை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் தற்போது “காத்து வாக்குல இரண்டு காதல்”, “நெற்றிக்கண்” மற்றும் தன்னுடைய ரவுடி புரோடுக்ஷன் மூலம் சில படங்களை தயாரித்து வருவதில் பிசியாக இருப்பதால், திருமண குறித்த தகவல் உண்மையா? அல்லது வழக்கம் போல் வதந்தியா என்பது விரைவில் தெரிந்து விடும்.

Latest Videos

click me!