பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு, தற்போது வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது, இவர் ஹீரோயினாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளதாக வனிதாவே சமூக வலைதள பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வாழ்க்கையை ஆரம்பித்த வனிதா அதேவேகத்தில் முடித்துக் கொண்டார். வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். அங்கு பீட்டர் பால் மூக்கு முட்ட குடித்ததால் பிரச்சனை செய்தார். அதன் பின்னர் சென்னை திரும்பிய பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கி ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து அடுத்த படமொன்றி இயக்க உள்ளார். அதில் கதாநாயகியாக நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இவர் நடிக்க உள்ள மற்றொரு படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
ஹரி நாடார் என்பவர் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். '2K அழகானது காதல்’ என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக வனிதா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.