நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால், இந்த ஆண்டு பொங்கலுக்கு அதற்கு போட்டியாக பாலாவின் வணங்கான் மற்றும் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படங்கள் தவிர்த்து மற்ற திரைப்படங்கள் போட்டிக்கு வராமல் இருந்தன. ஆனால் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று நிலைமை தலைகீழாக மாறியது. திடீரென விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
24
Vidaamuyarchi out of Pongal Race
விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால், அதற்கு பதில் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் பொங்கல் ரேஸில் குதித்தன. அதன்படி விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியன் நடித்த படைத்தலைவன், சிபிராஜின் டென் ஹவர்ஸ், சுசீந்திரன் இயக்கிய 2 கே லவ் ஸ்டோரி, ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, விஷ்ணு வர்தன் இயக்கிய நேசிப்பாயா, சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த மதகஜராஜா என இந்த லிஸ்ட் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே சென்றது.
பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் இத்தனை படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் தேதியை அறிவித்தன. ஆனால் இந்த பட்டியலில் நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை, வணங்கான், மதகஜராஜா போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் இருப்பதால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி பொங்கல் ரேஸில் இருந்து மூன்று படங்கள் தற்போது விலகி இருக்கின்றன.
44
3 Movies Skip Pongal Release
அதன்படி படைத்தலைவன், டென் ஹவர்ஸ் மற்றும் 2கே லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் தான் தற்போது பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஷங்கரின் கேம் சேஞ்சர், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், ஷான் நிகமின் மெட்ராஸ்காரன் ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 10ந் தேதியும், விஷால் நடித்துள்ள மதகஜராஜா ஜனவரி 12ந் தேதியும், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளி நடித்துள்ள நேசிப்பாயா மற்றும் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ஜனவரி 14-ந் தேதியும் ரிலீஸ் ஆக உள்ளது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.