Manjari
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டவர் மஞ்சரி. இவர் முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் பிக் பாஸில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களில் ஒருவராக எண்ட்ரி கொடுத்த மஞ்சரி, இந்த வீட்டில் சிறப்பாக கேம் விளையாடி 90 நாட்கள் வரை தாக்குப்பிடித்து நேற்று எலிமினேட் ஆனார்.
Bigg Boss Manjari
மஞ்சரியின் எவிக்ஷன் பிக் பாஸில் உள்ள சக போட்டியாளர்களுக்கே ஷாக்கிங் ஆக இருந்தது. ஏனெனில் பைனல் வரை செல்லும் தகுதி உடைய போட்டியாளர்களில் ஒருவராக மஞ்சரி இருந்தார். ஆனால் அவரின் இந்த எவிக்ஷன் ஒரு unfair எவிக்ஷனாகவே பார்க்கப்பட்டது. பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறும் முன் மஞ்சரிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பேசிய அவர், யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... PR டீம் சிறப்பா வேலை செய்றாங்க! சௌந்தர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!
Manjari Eliminated
தொடர்ந்து மஞ்சரியின் நெருங்கிய நண்பரான முத்துக்குமரன் பேசுகையில், மஞ்சரி எனக்கு பிரண்ட் இல்ல, என்னுடைய கூட பிறந்த அக்காவாக மஞ்சரி வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என பிரியப்படுகிறேன். நான் இந்த வீட்டில் ஒருவருக்காக நிற்க வேண்டும் என நினைத்தேன் என்றால் அது மஞ்சரிக்காக மட்டும் தான். அதனால் தான் மஞ்சரி என்னை ஜெயித்துவிட்டார் என சொன்னேன். ஒரு பெரிய ரகசியம் என்னவென்றால், எனக்கு யாரைப் பார்த்தும் பொறாமை இருக்காது. ஆனால் மஞ்சரி, ஜாக்குலின் கிட்டயோ, ரயான் கிட்டயோ, தர்ஷிகா கிட்டயோ பேசும் போது எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கும் என எமோஷனலாக பேசினார்.
Manjari Last Wish in Bigg Boss
பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகும் போட்டியாளர், அந்த வீட்டை விட்டு வெளியேறும் முன், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட டிராபியை உடைத்துவிட்டு தான் வெளியே செல்வார்கள். ஆனால் மஞ்சரி, நேற்று அந்த டிராபியை உடைக்கும் முன், பிக் பாஸிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தான் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்துவிட்டு வருவதாக தன் மகனிடம் கூறி இருந்ததாகவும், தற்போது அது நிறைவேறாமல் போனதால் இந்த டிராபியை உடைக்காமல் எடுத்துக் கொண்டு சென்று என் மகனிடம் கொடுக்க ஆசைப்படுகிறேன் என கூறினார்.