ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் 'கேம் சேஞ்சர்'! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

First Published | Jan 6, 2025, 12:01 PM IST

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
 

Ram Charans Game Changer film update out

இதுவரை தமிழில் 'ஜென்டில்மேன்'  முதல் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், என தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கி தோல்வியை கண்டிடாத இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் சங்கர். ஆனால் இவர் இயக்கத்தில் கடைசியாக கடந்தாண்டு வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. எனினும் இந்த படத்தின் மூன்றாம் 2025-ல் வெளியாக உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக இதன் ட்ரைலர், கடந்த ஆண்டு வெளியான 'இந்தியன் 2' படத்தின் முடிவில் வெளியிடப்பட்டது.

Game Changer Release Jan 10th

'இந்தியன் 2' திரைப்படம் தொடர்ந்து தாமதமாகி கொண்டே சென்ற நிலையில், அந்த படத்தில் இருந்து விலகி ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்க துவங்கினார். ஆனால் லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, மீண்டும் இயக்குனர் ஷங்கரை இந்தியன் 2 படத்தை இயக்க வைத்தது. 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை, ஒரே நேரத்தில் இயக்கி முடித்தார். இயக்குனர் ஷங்கர் கடந்த ஆண்டு, 'இந்தியன் 2' திரைப்படத்தை வெளியிட்ட நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு 'கேம் சேஞ்சர்' வெளியாக உள்ளது. சுமார் மூன்று வருடத்திற்கு மேல் இந்த திரைப்படத்தை செதுக்கி உள்ளார் இயக்குனர் ஷங்கர்.

PR டீம் சிறப்பா வேலை செய்றாங்க! சௌந்தர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!
 

Tap to resize

Indian 2 is Big Failure

'இந்தியன் 2' படத்தில், மிஸ் ஆன வெற்றியை 'கேம் சேஞ்சர்' திரைப்படம் கண்டிப்பாக கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் படு பிரமாண்டமாக இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
 

Ram Charan Play duel Role

ராம்சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், அப்பாவாக ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலியும், மகனாக நடித்துள்ளார் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரு மற்றும் ரத்த வேலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, சமீர் முகமத் - ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

நடிகர் பிரபுவுக்கு என்ன ஆச்சு? மூளையில் நடந்த அறுவை சிகிச்சை - வெளியான பரபரப்பு தகவல்!
 

Game Changer Pre Booking Collection

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ள நிலையில், பாடல்களுக்காக மட்டும் சுமார் 75 கோடிக்கு மேல் இயக்குனர் ஷங்கர் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், ராம்சரண் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த திரைப்படம், அரசியலை மையப்படுத்தி மட்டுமின்றி பொதுநல நோக்கத்தோடு முக்கிய கருத்தை வலியுறுத்தி உள்ளது.  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின்,  பிரீ புக்கிங் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், தற்போது சுமார் 7 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெரும் பட்சத்தில் ரூ.1000 கோடியை எளிதில் தாண்டும் இப்படம் என்பதே திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது.
 

Latest Videos

click me!