அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கிய இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும், இந்தி ரசிகர்கள் புஷ்பா 2 படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் உலகளவில் ரூ.1800 கோடி வசூலித்து மாஸ் காட்டியது.
24
Pushpa 2 Box Office
புஷ்பா 2 படம் இந்தியாவில் மட்டும் ரூ.1400 கோடிக்கு மேல் வசூலித்தது. அதிலும் குறிப்பாக இந்தியில் மட்டும் இப்படம் 900 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. புஷ்பா 2 திரைப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின் இந்தியாவில் சக்கைப்போடு போட்ட திரைப்படம் என்றால் அது முஃபாசா தி லயன் கிங். இப்படம் கடந்த டிசம்பர் மாதம் 20ந் தேதி உலகளவில் ரிலீஸ் ஆனது. குறிப்பாக இப்படத்திற்கு உச்ச நட்சத்திரங்கள் டப்பிங் பேசி இருந்தனர்.
இந்தியில் ஷாருக்கான், தெலுங்கில் மகேஷ் பாபு ஆகியோர் டப்பிங் பேசியிருந்த நிலையில் தமிழில், அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி, நாசர் ஆகியோர் டப்பிங் பேசி இருந்தனர். இப்படம் தமிழ்நாட்டில் அமோக வரவேற்பை பெற்று ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் இந்தியாவில் இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 திரைப்படம் இதில் பாதிகூட வசூலிக்கவில்லை.
44
Mufasa The Lion King Box Office Collection
இந்நிலையில், முஃபாசா தி லயன் கிங் திரைப்படத்தின் உலகளாவிய வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் ரிலீஸ் ஆன 15 நாட்களிலேயே உலகளவில் ரூ.3200 கோடி வசூலித்துள்ளதாம். இது கிட்டத்தட்ட புஷ்பா 2 படத்தின் உலகளாவிய வசூலை விட டபுள் மடங்காகும். குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் முஃபாசா படம் அதிக வசூல் ஈட்டி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 6-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.