cinema
ஷாருக்கானின் வாரிசுகளான சுகானா - ஆரியனை தொடர்ந்து, 11 வயதாகும் ஆப்ரமும் திரையுலகில் கால்பதிக்க உள்ளார்.
ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ரம் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்ற உள்ளார்.
ஷாருக்கானின் மூத்த மகன் ஆரியன் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சுகானா தன்னுடைய தந்தையுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ரம், 11 வயதிலேயே திரையுலகில் தன்னுடைய குரல் மூலம் ஆதிக்கம் செலுத்த வருகிறார்.
இந்தப் படத்தில் ஆப்ரம் குட்டி முஃபாசாவுக்குக் குரல் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான், ஆர்யன் மற்றும் ஆப்ரம் ஆகிய மூவருமே டப்பிங் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் படத்தில் ஷாருக்கான் பெரிய முஃபாசாவுக்கும், ஆர்யன் சிம்பாவுக்கும் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த படத்தில் டப்பிங் செய்ததற்காக, ஆப்ரமுக்கு 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு ஷாருக்கானும் ஆரியனும் ‘தி லயன் கிங்’ படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்போது இந்தப் படத்தில் ஆப்ரமின் வருகை இதனை சிறப்பானதாக்கியுள்ளது.
ஷாருக்கான் எப்போதும் தனது குழந்தைகள் படிப்பை முடித்த பின்னரே திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினார். இருப்பினும், ஆப்ரம் விஷயத்தில் எண்ணத்தை மாற்றியுள்ளார்.
ஆர்யனும் சிறுவயதில் ஷாருக்கானின் படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆப்ரமின் குரலைக் கேட்க ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.