cinema
நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யா டிசம்பர் 4-ஆம் தேதி நடிகை சோபிதாவை காதலித்து கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தது.
300 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், கோலிவுட் நடிகர் கார்த்தி, சிரஞ்சீவியின் குடும்பம், டகுபதி குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சோபிதாவின் அலங்காரம் மற்றும் அவரின் நகைகளும் அதிகம் கவனிக்கப்பட்டது. தங்க இழைகளை கொண்டு நெய்யப்பட்ட காஞ்சிபுர புடவையில் அழகு தேவதையாக மின்னினார் சோபிதா.
அதே போல் அவர் அணிந்திருந்த நகைகளும் பாரம்பரியம் மற்றும் இந்த காலத்திற்கு எதிரா போல் ஸ்டைலிஷாகவும் இருந்தது.
உச்சம் தலையில் துவங்கி, உள்ளம் கால் வரை அணைத்து நகைகளும் தங்கம், முத்து, மரகத கற்கள், போன்ற விலை உயர்ந்த கல் பாதிக்கப்பட்ட நகைகளை அணிந்திருந்தார்.
மேலும் மூக்கில் அணிந்திருந்த புல்லாக்கு, கை வாங்கி... சக்கர மோதிரம், காலில் உள்ள தங்க கொலுசு போன்றவை கூடுதல் அழகு.
முகூர்த்தத்திற்கு முன் தங்க நிற சேலையிலும், தாலி கட்டிய பின்னர் வெள்ள நிற புடவையும் அணிந்திருந்தார். நாக சைதன்யா பட்டு வேஷ்டி சட்டையில் காணப்பட்டார்.
சோபிதாவின் தனித்துவமான அலங்காரம் மற்றும் நகைகளின் அழகை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது.
அதே போல் திருமண சடங்குகள் பற்றிய புகைப்படமும் இதில் உள்ளது. இவை ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.