cinema
'தேவதையை கண்டேன்' படத்தில் நடித்த சோனியா அகர்வால் அந்த படத்தின் இயக்குனர் செல்வா ராகவனை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, 2010-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகை ரேவதி, மலையாள இயக்குனர் சுரேஷ் சந்திரா மேனனை காதலித்து 1986 இல் அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகை 'நயன்தாரா நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
குஷ்பூ நடித்த முறைமாமன் படத்தில் நடிக்கும் போது சுந்தர் சி-யை காதலிக்க துவங்கினார். பின்னர் இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை சீதா 'புதிய பாதை' திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் qபார்த்திபனை காதலித்து 1990-ல் திருமணம் செய்து கொண்டார். 2001-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
மலையாள நடிகையான லிசி , இயக்குனர் ப்ரியதர்ஷனை காதலித்து 1990-ல் திருமணம் செய்தார். 24 வருடங்களுக்கு பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அட்லீ தான் இயக்கிய குறும்படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரியாவை காதலிக்க துவங்கினார். பின்னர் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இயக்குனர் பொன்வண்ணன், நடிகை சரண்யா நடித்த கருத்தம்மா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இருவரும் காதலித்து 1995இல் திருமணம் செய்து கொண்டனர்.
சுகாசினி, மணிரத்னம் இயக்கத்தில் உருவான சில திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக பணியாற்றிய போது இருவரும் காதலித்த துவங்கி, 1988 திருமணம் செய்து கொண்டனர்.
தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் கிருஷ்ணா வம்சையை ரம்யா கிருஷ்ணன் காதலித்து 2003-ல் திருமணம் செய்து கொண்டார்.
ராதிகா மற்றும் பிரதாப் இருவரும் 1985 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுத் தெரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.