பணக்கார இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published | Jan 6, 2025, 10:07 AM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

AR Rahman

ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதுவரை இளையராஜா கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமாவை, மெல்ல மெல்ல ஏ.ஆர்.ரகுமான் எனும் இசைப்புயல் ஆக்கிரமித்தது. இவர் இசையமைத்த முதல் படமே பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகி, அப்படத்தின் பாடல் காலம் கடந்து கொண்டாடப்படும் மாஸ்டர் பீஸ் பாடல்களாக மாறியது. அப்படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

AR Rahman Birthday

ரோஜா படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ஆஸ்தான் இசையமைப்பாளராக மாறிய ரகுமான், அவர் இயக்கிய படங்களுக்கு வரிசையாக இசையமைத்து வருகிறார். தற்போது கூட அவர் இயக்கி உள்ள தக் லைஃப் படத்துக்கும் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ரகுமான், இன்றளவும் நம்பர் 1 இசையமைப்பாளர் என்கிற அந்தஸ்தை கட்டிக் காத்து வருகிறார்.

Tap to resize

Isaipuyal AR Rahman

ஏ.ஆர்.ரகுமான் சாயிரா பானு என்பவரை கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கதீஜா, ரஜீமா என இரு மகள்களும், ஏ.ஆர்.அமீன் என ஒரு மகனும் உள்ளனர். இதில் ஏ.ஆர் ரகுமானின் மூத்த மகள் கதீஜா, தன் தந்தையை போலவே இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இவர் இசையமைத்த முதல் படமான மின்மினி வெளியானது. அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் பாடகராக கலக்கி வருகிறார். சுமார் 29 ஆண்டுகள் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதையும் படியுங்கள்... ரூ.25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் வீடு; பல ஆடம்பர ஸ்டுடியோக்கள்! ராஜாவாக வாழும் ஏ.ஆர். ரஹ்மான்!

AR Rahman Salary

ஏ.ஆர்.ரகுமான் இன்று தன் 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மனைவி உடனான விவாகரத்துக்கு பின்னர் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.2100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அவர் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

AR Rahman Net Worth

இந்திய சினிமா வரலாற்றில் அதிக சொத்து மதிப்பு உள்ள இசையமைப்பாளரும் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாடகராகவும் ஏ.ஆர்.ரகுமான் தான் உள்ளார். இவருக்கு ஒரு பாடலுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

AR Rahman Assets

ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமாக சென்னை, மும்பை, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் சொகுசு பங்களாக்கள் உள்ளது. இதுதவிர துபாய் மற்றும் சென்னையில் அதிநவீன இசைக்கூடங்களும் வைத்திருக்கிறார். மேலும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். ஏர்டெல், டொயொட்டா உள்பட சில நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார் ரகுமான்.

AR Rahman Car Collection

கார்கள் மீது அலாதி பிரியம் கொண்ட ஏ.ஆர்.ரகுமான், சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், போர்ஸே டேகன், ஜாகுவார், ஆடி க்யூ 7, பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ், வால்வோ, பென்ஸ் எஸ் கிளாஸ், பார்ச்சூனர் உள்பட பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள்; தந்தை பற்றி இதனால் தான் பேசவில்லை! ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

Latest Videos

click me!