சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, ஹாயாக ஹனிமூன் சென்ற கீர்த்தி சுரேஷ்!

First Published | Jan 6, 2025, 9:08 AM IST

காதலனை கரம்பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்னர் ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்.

keerthy suresh

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனாக ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

Actress keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் 12ம் வகுப்பு படிக்கும் போது ஆர்குட் வழியாக ஆண்டனி தட்டில் உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து 2016-ம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு குடும்பத்தினரும் ஓகே சொன்னதை அடுத்து டிசம்பர் 12ந் தேதி கோவாவில் கீர்த்தியின் திருமணம் நடைபெற்றது.

Tap to resize

keerthy suresh Honeymoon

கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தை சேர்ந்தவர், ஆண்டனி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் தளபதி விஜய், நடிகை திரிஷா, இயக்குனர் அட்லீ, நடிகர் சூரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது.

இதையும் படியுங்கள்... கீர்த்தி சுரேஷை விட இத்தனை வயது மூத்தவரா ஆண்டனி? வெளிவந்த 15 வருட காதல் கதை

keerthy suresh Photos

திருமணம் முடிந்த கையோடு, தான் பாலிவுட்டில் அறிமுகமாகும் பேபி ஜான் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிப்பில் அவர் நடித்த பேபி ஜான் திரைப்படம் கடந்த டிசம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh In Thailand

பேபி ஜான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலை கூட எட்டவில்லை. கடந்த ஆண்டு கீர்த்தி நடித்த படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றி பெறாவிட்டாலும், அவருடைய திருமணம் 2024-ம் ஆண்டை கீர்த்தி சுரேஷுக்கு மறக்க முடியாத ஆண்டாக மாற்றி உள்ளது.

keerthy suresh Honeymoon Photos

பிரபலங்கள் அனைவரும் திருமணம் முடிந்ததும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்வது வழக்கம். அந்த வகையில் கீர்த்தி சுரேஷும் தாய்லாந்தின் தன்னுடைய கணவர் ஆண்டனி தட்டில் உடன் ஹனிமூன் கொண்டாட சென்றிருக்கிறார். அங்கு இருவரும் சேர்ந்து புத்தாண்டையும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

keerthy suresh husband Antony Thattil

தாய்லாந்தில் உள்ள புக்கெட் தீவில் நடிகை கீர்த்தி சுரேஷ், ஹனிமூன் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. தற்போது புதுப்படங்களிலும் கீர்த்தி கமிட் ஆகாததால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நடிச்சிருக்கவே மாட்டேன்! கீர்த்தி சுரேஷ் வேதனை!

Latest Videos

click me!