புது வீட்டில் பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் டேட்டிங்... காத்துவாக்குல 2-வது காதல் செய்யும் நாக சைதன்யா

First Published | Jun 21, 2022, 9:28 AM IST

Naga Chaitanya : நடிகை சமந்தாவுடன் விவாகரத்தாகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், நடிகர் நாக சைதன்யா தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருவருக்கும் விவாகரத்தாகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், நடிகர் நாக சைதன்யா தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் ஷோபிதா துலிபாலா என்கிற இளம் நடிகையை தான் தற்போது காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

Tap to resize

அதுமட்டுமின்றி நடிகை ஷோபிதா உடன் நடிகர் நாக சைதன்யா அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கூட ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனக்கு சொந்தமான பங்களாவுக்கு ஷோபிதாவை நாகசைதன்யா அழைத்து வந்ததாகவும், அங்கு இருவரும் சில மணிநேரம் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகை ஷோபிதா, தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மேஜர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Vikram Box Office : பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்த விக்ரம்

Latest Videos

click me!