நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான வரலட்சுமி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் நடிகை ராதிகா குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது : “சிலர் என்னிடம் ஏன் நீங்க ராதிகாவை அம்மானு கூப்பிடாம ஆண்ட்டினு கூப்பிடுறீங்கனு கேட்குறாங்க. நான் எதுக்கு ராதிகாவை அம்மானு கூப்பிடனும். அவங்க என் அப்பாவோட இரண்டாவது மனைவி. அவ்ளோ தான்.
நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும், அவரை எனக்கு பிடிக்காது எனவும், நான் அவரை வெறுப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். அப்படி எதுவுமே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்கிறோம். அதனால் அவரை அம்மானு எப்படி கூப்பிட முடியும்.