தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் எப்போது எலியும் பூனையுமாக தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீசானாலே திரையரங்குகளில் திருவிழா போல இருக்கும். அதுவே இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த படம் ரிலீசானால் என்ன ஆகும்.
அஜித்தும், விஜய்யும் இணைந்து நடிக்க மாட்டார்களா என ஏங்கி வந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. விரைவில் நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் இணைந்து ஒரு பேன் இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையும், பன்முகத்திறமை கொண்ட கலைஞருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
அஜித் - விஜய் இணைந்து நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்துள்ள அவர், அப்படத்தை அவரது மகன் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். கங்கை அமரன் வெளியிட்டுள்ள இந்த மாஸான அப்டேட்டால் விஜய் - அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.