கவுத்திவிட்ட குபேரா; கமுக்கமாக விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த தனுஷ்!

Published : Jul 08, 2025, 03:41 PM IST

குபேரா படத்தின் தோல்விக்கு பின்னர் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தனுஷ், அடுத்த படத்திற்காக விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

PREV
14
Dhanush Next Movie With H Vinoth :

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் எச்.வினோத். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜனநாயகன் திரைப்படம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலும் நடிக்கிறார்கள். அப்படத்தை இயக்கி முடிந்த கையோடு இயக்குனர் எச்.வினோத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூறியதாக தகவல்கள் பரவின. அதனால் அவருடன் தான் எச்.வினோத் அடுத்த படம் பண்ணுவார் என்றெல்லாம் பேச்சு அடிபட தொடங்கியது.

24
தனுஷ் - எச்.வினோத் கூட்டணி

ஆனால், தற்போது திடீர் ட்விஸ்ட் ஆக தனுஷ் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளாராம். இதன்மூலம் முதன்முறையாக தனுஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளார் சாம் சி.எஸ். மாஸ்டர், மகான், லியோ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைத் தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் தனுஷ் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தையும் தயாரிக்க உள்ளதாம். ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன பின்னர், தனுஷின் படப் பணிகளை எச்.வினோத் தொடங்குவார் என கூறப்படுகிறது.

34
கம்பேக் கொடுப்பாரா தனுஷ்?

தனுஷ் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அவர் நடித்து கடந்த மாதம் ரிலீஸ் ஆன குபேரா திரைப்படம் மற்ற மொழிகளில் வெற்றியடைந்தாலும் தமிழில் அட்டர் பிளாப் ஆனது. சேகர் கம்முலா இயக்கிய அப்படம் தெலுங்கில் 70 கோடிக்கு மேல் வசூலித்திருந்தாலும் தமிழில் வெறும் 20 கோடி தான் வசூலித்தது. இதனால் கோலிவுட்டில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இட்லிக்கடை திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இப்படத்தை இயக்கியும் உள்ளார் தனுஷ். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி திரைக்கு வர உள்ளது.

44
தனுஷ் கைவசம் உள்ள படங்கள்

இதுதவிர இந்தியில் தேரே இஸ்க் மெயின் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இது தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதையடுத்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அதற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களியுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படங்களை முடித்த பின்னர் தான் தனுஷ் எச்.வினோத் இயக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories