மிக! மிக!! பிரம்மாண்டம்... மருமகன் தனுஷை பார்த்து மாமனார் ரஜினி எடுத்த அதிரடி முடிவு...!

Published : Jul 27, 2021, 06:52 PM IST

தலைவர் 169 படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், 170வது படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

PREV
16
மிக! மிக!! பிரம்மாண்டம்... மருமகன் தனுஷை பார்த்து மாமனார் ரஜினி எடுத்த அதிரடி முடிவு...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலை விட்டு ஒட்டுமொத்தமாக ஒதுங்க முடிவெடுத்த கையோடு, சினிமாவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ரசிகர்களுக்காக அதிக படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. 

26

எனவே, தீபாவளிக்கு வெளியாக தயாராக இருந்த இந்த திரைப்படம், பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில்  அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.  இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

36
Kollywood

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக படம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனாவால் படப்பிடிப்பு தாமதமானது. எனவே தீபாவளிக்கு படத்தை இறக்கியே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் படக்குழு தீயாய் வேலை செய்து வருகிறது. 

46

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பின் போது, அதில்  பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

“அண்ணாத்த” படம் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் அதே நேரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது. தலைவர் 169 படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குவர் என்று கூறப்படுகிறது.

56
Rajinikanth

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படத்தை பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கிய பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளதாகவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

66

சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளை தனுஷ் தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில், மருமகன் பாணியில் மாமனார் ரஜினியும் தெலுங்கு இயக்குநருக்கு ‘டிக்’ அடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories