என்ன விட்டுடுங்கனு கதறிய லட்சுமி ராமகிருஷ்ணனிடம்... வழிய போய் வம்பு வாங்குகிறாரா வனிதா? கொடுத்த பதிலடி அப்படி!

Published : Jul 27, 2021, 05:26 PM IST

வனிதாவும், பவர்ஸ்டாரும் 'பிக்கப் ட்ரோப்' படத்தின் புரோமோஷனுக்காக எடுத்த புகைப்படத்தை, நெட்டிசன்கள் எடிட் செய்து கலாய்த்து வந்த நிலையில்... இதனை ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்ய அவரும் பதிலடி தன்னுடைய பதிலை காமெடியாக தெரிவித்திருந்தார். இதற்க்கு தற்போது பதிலடி கொடுத்து வழிய சென்று வனிதா கொடுத்துள்ள பதில்? மீண்டும் வம்பு வாங்குகிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

PREV
16
என்ன விட்டுடுங்கனு கதறிய லட்சுமி ராமகிருஷ்ணனிடம்... வழிய போய் வம்பு வாங்குகிறாரா வனிதா? கொடுத்த பதிலடி அப்படி!
Vanitha vijayakumar

சர்ச்சை என்ற பெயருக்கு மற்றொரு அர்த்தம் என்றாலே அது வனிதா விஜயகுமார் தான் என்பது பேச ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் லைம் லைட்டிற்கு வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது. அதுகுறித்து கருத்த் தெரிவித்த பலரையும் வனிதா வெளுத்து வாங்கினார். அப்படி அவரிடம் சூடு வாங்கியதில் பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒருவர். 

26
vanitha vijayakumar

அப்படியிருக்க தற்போது மீண்டும் வனிதா விஜயகுமார் விஷயத்தில் வாண்டடாக போய் சிக்க உள்ளார். சமீபத்தில் வனிதா 4வது திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் கூறியதை அடுத்து, சோசியல் மீடியாவில் அது பேசுபொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் வனிதா மாலையும், கழுத்துமாக இருக்கும் போட்டோஸ் வெளியாகி வைரலானது. 

36
Vanitha vijayakumar

பலரும் இது சினிமா புரோமோஷன் என கேஸ் செய்திருந்தாலும், நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய வழக்கமான சேட்டைகளை அரங்கேற்றி வந்தனர். ஆனால் ‘பிக்கப் ட்ராப்’ என்ற படத்தில் வனிதாவும் பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல் நேற்று வெளியானது. இதனையடுத்து 4வது திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா, 4 இல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் அது என் சொந்த விருப்பம் என காரசாரமாக பிரஸ் மீட்டில் குரலை உயர்த்தி பேசினார். 

46
Vanitha vijayakumar

மேலும் வனிதாவும், பவர்ஸ்டாரும் கன்னத்தோடு கன்னம் வைத்து சிரித்த முகமாக போஸ் கொடுத்தது போல் எடிட் செய்து தங்களது சேட்டையை காட்டினர்.

56

அந்த புகைப்படத்தை  ட்விட்டரில் வெளியிட்டு நெட்டிசன் ஒருவர், நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்தார். இதை பார்த்த அவர், இது காமெடியாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தயவு செய்து என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கதறியபடி. நன்றாக சிரித்தேன் என கண்களில் நீர் வரும் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
 

66
vanitha

இவரது இந்த பதிவுக்கு தான் தற்போது வனிதா வம்பிழுப்பது போல் பதிலடி கொடித்துள்ளார். அதில், அருவருக்கத்தக்க விஷப்பெண்மணிக்கு என்னருடைய நன்றிகள். அவர் தற்போது என்னுடைய அபிமானியாகவும், ரசிகையாகவும் மாறி விட்டார். அனைவரையும் சிரிக்க வைக்கும் விதமாக ஒரு கதை தயாராகிவிட்டது. நானும் பவர் ஸ்டாரும் இதில் ஜெயித்து விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இவர் கூறிய பதில் எல்லாம் ஓகே... ஆனால் அவரது கோவத்தை தூண்டும் விதமாகவும் இதில் சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories