தமிழ் திரையுலகில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் சிம்பு. இவர் கடந்த 2015-ம் ஆண்டு இசையமைப்பாளர் அனிருத் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து பீப் சாங் என்கிற பெயரில் ஒரு சுயாதீன பாடல் ஒன்றை பாடி இருந்தார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்த இப்பாடலுக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி இப்பாடலை பாடிய சிம்புவையும், இசையமைத்த அனிருத்தையும் கைது செய்ய வேண்டும் என கண்டனக் குரல்களும் எழுந்தன.