ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து தமிழில், விஜய்யுடன் பைரவா, சர்க்கார், தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயன் ஜோடியாக ரெமோ மற்றும் ரஜினிமுருகன், ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் கீர்த்தி.
சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படத்தில், ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இப்படம் தோல்வி படமாகவே அமைந்தது. இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு, மீண்டும் ஒரு தங்கச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
அண்ணாத்த படத்தில் மிஸ் பண்ணியதை போலா ஷங்கர் படம் மூலம் மீட்டெடுத்து விடலாம் என ஆவலோடு காத்திருந்த கீர்த்தி சுரேஷை, கிரிஞ் நடிகையாக்கி விட்டது இந்த போலா ஷங்கர். அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.175 கோடி வசூலித்தது. ஆனால் போலா ஷங்கருக்கு அதில் பாதிகூட தேறாது என கூறப்படுகிறது. இதன்மூலம் ராசியில்லாத தங்கச்சி ஆகி இருக்கிறார் கீர்த்தி. போலா ஷங்கர் படத்தின் தோல்வியால் கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் தான் இந்த போலா ஷங்கர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மயிலை மறக்க முடியுமா... வியக்க வைக்கும் நடிகை ஸ்ரீதேவியின் ஹிட் லிஸ்ட் ஒரு பார்வை