டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர்... மூன்றே நாளில் இத்தனை கோடியா? தனக்கிருக்கும் பாக்ஸ் ஆபிஸ் பவரை நிரூபித்த ரஜினி

First Published | Aug 13, 2023, 11:25 AM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மூன்றே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்து உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வழக்கமாக விடுமுறை நாட்களில் தான் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால் ஒரு நடிகரின் படம் ரிலீஸ் ஆனால் அன்றைய நாள் விடுமுறை நாளாக மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். இப்படம் ரிலீஸ் ஆன தினத்தன்று, சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த சம்பவங்களும் அரங்கேறின.

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்த ஜெயிலர், இரண்டாம் நாளில் 150 கோடி வசூலை கடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... திடீரென ரிஷிகேஷ் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. தயானந்த சரஸ்வதி சமாதி - மாலை அணிவித்து மரியாதை! Viral Pics

Tap to resize

Jailer

இந்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் மூன்றே நாளில் உலகளவில் ரூ.220 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இதன்மூலம் தன்னுடைய பாக்ஸ் ஆபிஸ் பவரை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் ரஜினி.

ஜெயிலர் திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. அண்ணாத்த தோல்விக்கு பின் ரஜினியும், பீஸ்ட் தோல்விக்கு பின் நெல்சனும் தரமான கம்பேக் கொடுத்த படமாக ஜெயிலர் அமைந்துள்ளது. மூன்று நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள ஜெயிலர் திரைப்படம், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மயிலை மறக்க முடியுமா... வியக்க வைக்கும் நடிகை ஸ்ரீதேவியின் ஹிட் லிஸ்ட் ஒரு பார்வை

Latest Videos

click me!