After Abhinay Death Family Shocking Behavior Exposed: ‘துள்ளுவதோ இளமை’ பட புகழ் அபிநய், கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது மரணம் பற்றி அறிந்து உறவினர்கள் செய்த மோசமான செயல் குறித்து நடிகர் விஜய் முத்து கூறியுள்ளார்.
'துள்ளுவதோ இளமை' படத்தில், தனுஷை விட ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் தான் அபிநய். அழகும் திறமையும் ஒரு சேர இறந்தாலும், ஆரம்ப கட்டத்தில் இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் தோல்வியை தழுவியதால்... ஹீரோ ட்ராக்கில் இருந்து விலகி குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.
25
அம்மா மறைவால் மாறிய வாழ்க்கை:
நடிகர் என்பதை தாண்டி, சில முன்னணி நிறுவனங்களில் விளம்பர படங்களிலும் மாடலாக நடித்துள்ளார். அம்மாவின் மறைவால் இவரின் கரியரே திசைமாறி போன நிலையில், அபிநய் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். ஒரு கட்டத்தில் இவரும் , இவருடைய தந்தையும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை வந்தது. பக்க பலமாக இருந்து வந்த தந்தையும் கடந்த ஆண்டு இறந்த நிலையில், அபிநய்க்கு கல்லீரல் குரோசிஸ் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
35
அபிநய்யின் மரணம்:
உறவினர்கள் யாரும் இவருக்கு உதவ முன்வராத நிலையில், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், மற்றும் நண்பர்கள் தான் இவருக்கு உதவி வந்தனர். இவருக்கு இன்னும் சில தினங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருந்த நிலையில் தான், நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில், உயிரிழந்தார். இவரது இறப்புக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.
45
உறவினர்களின் செயல்:
அபிநய்யின் பெற்றோர் உயிருடன் இல்லாததால், பெங்களூரில் உள்ள அவரின் உறவினர்களுக்கு இவரின் மரணம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. பல மணிநேரம் சில உறவினர்கள் யாராவது வந்து, இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்த்த நிலையில்... ஒருவர் கூட வராததும், அவர்களை தொடர்பு கொண்டு பேசிய செல் போன் ஆப் செய்யப்பட்டதும் தான் உச்சகட்ட அதிர்ச்சி.
55
நடிகர் கூறிய ஷாக் தகவல்:
அபிநய்யின் இறுதி சடங்கில் கலந்து கொண்டால், அதற்கான செலவுகளை தாங்கள் ஏற்க வேண்டி இருக்கும் என்பதற்கு அஞ்சியே... உறவினர்கள் யாரும் வரவில்லை என, நண்பர்கள் மட்டும் பாலா மட்டுமே கடைசி வரை இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டார்கள் என நடிகர் விஜய் முத்து தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், வாழ்வுக்கு வரவில்லை என்றாலும் சாவுக்காவது வர வேண்டும் என்கிற பண்பாடு கூட அறியாத மோசமானவர்களாக உள்ளனர் என... கண்டமேனிக்கு வசைபாடி வருகிறார்கள்.