தயாரிப்பாளராக மாற நினைத்து மொத்த பணத்தையும் இழந்த நடிகைகள்.. சாவித்ரியின் நிலை யாருக்கும் வரக்கூடாது..

Published : Jan 06, 2024, 10:37 AM ISTUpdated : Jan 06, 2024, 10:41 AM IST

சினிமாவில் கொடி கட்டி பறந்த சில நடிகைகள் தயாரிப்பாளர்களாக மாறி மொத்த சொத்துக்களை இழந்துள்ளனர். அப்படிப்பட்ட 5 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
தயாரிப்பாளராக மாற நினைத்து மொத்த பணத்தையும் இழந்த நடிகைகள்.. சாவித்ரியின் நிலை யாருக்கும் வரக்கூடாது..
Actor

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் அளவுக்கு நடிகைகள் நிலைத்திருக்கமாட்டார்கள். திருமணம், வாய்ப்பு குறைவு போன்ற பல காரணங்கள் இதற்கு இருக்கலாம். இந்த போக்கு சமீப காலமாக மாறி வருகிறது. நயன்தாரா, த்ரிஷா ஆகியோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால் சினிமாவில் கொடி கட்டி பறந்த சில நடிகைகள் தயாரிப்பாளர்களாக மாறி மொத்த சொத்துக்களை இழந்துள்ளனர். அப்படிப்பட்ட 5 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26

அமலா பால் :

நடிகை அமலாபால் தடயவியல் நிபுணராக நடித்த படம் கடாவர். இந்த படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் மாறினா. தான் நடித்து தயாரித்த கடாவர் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட்டார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் இப்படம் லாபகரமான படமாக அமையவில்லை. மேலும் ஹீரோயின் வாய்ப்புகளும் குறையவே தயாரிப்பாளராக மாறி கடைசியில் பணத்தை இழந்தது தான் மிச்சம்.

36

ரம்பா :

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்று அழைக்கப்பட்ட ரம்பா அப்போது உச்சத்தில் இருந்த டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்சத்தில் இருந்தார். ஆனால் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையால், நஷ்டத்தை சந்தித்தார். 2003-ம் ஆண்டு வாக்கில் ரம்பாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால், படத்தை தயாரிக்க முன் வந்தார்.

அந்த வகையில் 2003-ம் ஆண்டு சக்தி பரமேஸ் இயக்கத்தில் ரம்பா, ஜோதிகா, லைலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் த்ரீ ரோசஸ். ஆனால் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்பதால் ரம்பா கடும் நஷ்டத்தை சந்தித்தார். மேலும் இந்த படத்திற்காக தான் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார் ரம்பா. பின் சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

46

ராதிகா :

வெள்ளித்திரையில் வெற்றி நடிகையாக வலம் வந்து சின்னத்திரையிலும் தனது மார்க்கெட்டை தட்டி தூக்கிய ஒரே நடிகை என்றால் அது ராதிகா தான். ராடன் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ள ராதிகா பல சீரியல்கள் படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிக்கும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைத்தாலும் இவர் தயாரித்த படங்கள் தோல்வியை சந்தித்தன. மீண்டும் ஒரு காதல் கதை, ஜித்தன், மாரி போன்ற படங்களை அவர் தயாரித்துள்ளார். இதில் ஜித்தன் படம் படுதோல்வியை சந்தித்தது.

56

சாவித்ரி :

நடிகையர் திலகம் என அழைக்கப்படும் நடிகை சாவித்ரி 50, 60களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ஆனால் இவரின் கடைசி காலத்தில் கடனில் சிக்கி கஷ்டப்பட்டு உயிரிழந்தார். முதன்முதலில் கார் வாங்கிய ஹீரோயின், வீட்டில் நீச்சல் குளம் வைத்து கட்டிய நடிகை என்று திரையுலகை திரும்பி பார்க்க வைத்த சாவித்ரிக்கா இந்த நிலை என்று பலரும் வருத்தப்பட்டனர்.

நடிகை சாவித்ரியின் இந்த நிலைக்கு காரணம் அவர் தயாரிப்பாளர் ஆனது. தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு பிராப்தம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்த சாவித்ரியை உடன் இருந்தவர்களே சதி செய்து ஏமாற்றி விட்டனர். தொடர்ந்து படங்களை தயாரித்து மொத்த சொத்துக்களையும் இழந்த வீடு வாசலை எல்லாம் விற்க வேண்டிய நிலைக்க்கு தள்ளப்பட்டார். கடைசி காலத்தில் பல இன்னல்களை சந்தித்த அவ கேட்பாரற்று உயிரிழந்தார்.

66

மனோரமா :

தமிழ் சினிமாவில் மனோராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. காமெடி, குணச்சித்திரம் என எதுவாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். ஆனால் தயாரிப்பாளராக என்ற ஆசையில் மொத்த சொத்தையும் இழந்துவிட்டார்.

தனது  வளர்ப்பு மகன் பூபதி ஆலோசனையின் பேரில் தயாரிப்பாளரானார் மனோரமா. குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் நடிகராக அறிமுகமான பூபதி தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இவரின் ஆலோசனையின் பேரில் மனோரமா தூர்த்து சொந்தம் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்ததால் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்தார் மனோரமா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories