ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.. அழைப்பை ஏற்று அயோத்தி செல்கிறார் ரஜினிகாந்த் - வெளியான முக்கிய தகவல்!
Ansgar R |
Published : Jan 06, 2024, 12:01 AM IST
Rajinikanth Attending Ram Temple Inauguration : வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கின்றது. இதில் கலந்து கொள்ள பல பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த அயோத்தி ஸ்ரீ கோவிலில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆர்.எஸ்.எஸ் தென்பாரத அமைப்பாளர் செந்தில் குமார், தென்பாரத மக்கள் செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் மாநில இணைச் செயலாளர் ராம ராஜசேகர், மாநகர பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக சமூக ஊடக பார்வையாளர் அர்ஜுன் மூர்த்தி ஆகியோர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அழைப்பிதழ்களை வழங்கினர்.
33
Ram Temple Ayodhya
இந்நிலையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவுடன் அந்த விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வரும் 21ஆம் தேதி அயோத்தி செல்லும் ரஜினி, 22ஆம் தேதி கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு வரும் 23 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.