கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் வயகரா மாத்திரை கலந்த பாலை குடிக்கவில்லை என்ற விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் வயகரா மாத்திரை கலந்த பாலை குடிக்கவில்லை என்ற விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மீனாட்சியும் செல்பி பாட்டியும் கௌஷிக்கை கூப்பிட்டு விசாரிக்க கார்த்திக் நைட்ல பால் குடிக்க மாட்டாரு என்பதால் அவர் அந்த பாலை எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்துட்டாரு என்பது தெரிய வருகிறது.
24
Zee tamil Karthigai deepam serial
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரூமுக்குள் வர அருண் மார்க்கமாக பார்க்க இவள் என்னாச்சு என்று கேட்கிறாள். எவ்வளவு நாளைக்கு தான் நீயே வில்லியா இருப்பா, இன்னைக்கு உன்னை அடக்குற வில்லனாக நான் இருக்கேன் என்று டைலாக் பேசி நெருங்கி செல்கிறான், மறுபக்கம் அருணாச்சலம் மற்றும் அபிராமி ரூமுக்குள் இருக்க இவர் என்னன்னே தெரியல உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு, ஷாக் அடிச்சா மாதிரியே இருக்கு என்று அபிராமி வெள்ளத்தில் மாட்டின நிறைய வீட்டிற்கு இன்னும் கரண்ட் வரலையாம், போய் குடுத்துட்டு வாரீங்களா என்று கலாய்த்து அவரை சும்மா படுத்து தூங்குங்க என்று திட்டுகிறாள்.
அதனை தொடர்ந்து மீனாட்சி ரூமுக்குள் நுழைய அங்கு டிஸ்க்கோ லைட் எறிய ஆனந்த் புருஷன் ஊர்ல இருந்து வந்திருக்கானே, அவனுக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது சமைத்து கொடுப்போம்னு தோணுச்சா என்று ரொமான்டிக்காக பேச மீனாட்சி ஐயோ என்ன நடக்க போகுதுனு தெரியலையே என்று புலம்ப இட்ஸ் ஜஸ்ட் பிகினிங் என்று கதவை சாற்றுகிறான். மறுநாள் காலையில் கார்த்திக் தீபாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அவளை சாப்பிட சொல்லி கொண்டே பல்லவிக்கு போன் அடிக்க அந்த போன் மீனாட்சி கையில் இருக்கும் நிலையில் ரிங்காகிறது.
44
Karthigai deepam serial today episode
உடனே மீனாட்சி கார்த்தி எதுக்கு போன் பண்ரான்னு தெரியலையே என்று தீபாவை கூப்பிட போக தீபா கார்த்தியுடன் இருப்பதால் செய்வதறியாது தவிக்கிறாள். அடுத்து மீனாட்சி என்ன செய்வது என்று யோசித்து அங்கே சென்று எனக்கு முதுகு வலியா இருக்கு கொஞ்சம் மருந்து போட்டு விடு என்று சொல்லி தீபாவை அழைத்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.