விஜயலட்சுமி சமீபத்தில் வெளியிட்ட டான்ஸ் வீடியோ ஒன்றிற்கு கமெண்ட் செய்த ஒருவர். அம்மாவான உங்களுக்கு இது தேவையா என கேட்க கொந்தளித்த விஜி, அம்மானா மூலையில் உங்காத்துக்கிட்டு அழனுமா? ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் நான் ஒரு தியாகினு. அத நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க, தியாக செம்மல்னு. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவார்கள். உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்களுக்கு பிரச்சனை என்று பொரிந்து தள்ளியுள்ளார்.