தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, இன்றளவும் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா. இப்படம் வருகிற செப்டம்பர் 31-ந் தேதி ரிலீசாக உள்ளதால், அதற்கான புரமோஷன் பணிகளிலும் பிசியாக உள்ளார் திரிஷா.