சென்னை 28 படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 இரண்டாம் பாகம், கற்றது களவு, கசடதபற போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.