மாநகரம் படத்தில் சென்னை மீதான வெறுப்பை காட்டியது ஏன்? - ரியல் லைஃப் அனுபவத்தை சொன்ன லோகேஷ் கனகராஜ்

Published : Aug 23, 2022, 10:16 AM IST

Lokesh Kanagaraj : மாநகரம் படத்தில், நாயகன் ஸ்ரீயை சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியது ஏன் என்பது பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

PREV
15
மாநகரம் படத்தில் சென்னை மீதான வெறுப்பை காட்டியது ஏன்? - ரியல் லைஃப் அனுபவத்தை சொன்ன லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் 4 படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும், அந்த நான்குமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் கோலிவுட்டின் டாப் இயக்குனராக உயர்ந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதனிடையே சமீபத்தில் தனியார் ஊடகம் நடத்திய பிரஸ் மீட் ஒன்றில் கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய லோகேஷ் கனகராஜ், பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

25

அப்போது அவர் இயக்கிய முதல் படமான மாநகரத்தில், நாயகன் ஸ்ரீயை சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியது ஏன் என்றும், நிஜத்தில் உங்களுக்கு சென்னை பிடிக்குமா? பிடிக்காதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், நான் கோவை அருகே கிணத்துக்கடவு என்கிற சின்ன ஊரை சேர்ந்தவன். அப்போது அங்கிருந்து கல்லூரியில் படிக்க சென்றபோது கோயம்புத்தூரே எனக்கு புதுசா இருந்தது. அந்த நகர சூழலுக்கு என்னால் என்னை மாற்றிக் கொள்ளவே வெகு நாட்கள் ஆனது.

35

அப்படி இருக்கையில் அதைவிட பெரிய ஊரான சென்னைக்கு வந்தபோது என்னால் ஏத்துக்கவே முடியல. அது என்னோட பிரச்சனை தான். நான் முதன்முதலில் இங்கு வந்தப்போ, பஸ்ல போறதே பெரிய போராட்டமாக தான் இருந்தது. கோயம்புத்தூரில் அப்படி இல்லை. இந்த ஊர் செட் ஆகுறதுக்கு நிறைய நேரம் ஆகும்.

இதையும் படியுங்கள்... இரண்டாவது திருமணம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய நடிகை மேக்னா ராஜ் - என்ன சொல்லீருக்காங்க தெரியுமா?

45

மாநகரத்தில் ஸ்ரீயோட கேரக்டர், சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியிருந்தாலும், இறுதியில் அவன் இந்த ஊரை பற்றி புரிந்துகொள்ளும் காட்சியும் இருக்கும். மனுஷன் பண்ற தப்புக்கு ஊரை குறைசொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல. ஊர் என்பது பல மக்கள் வந்து போற இடம், பெயர் தெரியாத ஒருவனுக்கு கூட முதலில் உதவி செய்வது சென்னை மாதிரி ஊர்ல தான் நடக்கும்னு சொல்லிருந்தேன்.

55

சென்னை மீதான அன்பை வெளிப்படுத்தவே அப்படி காட்சி படுத்தி இருந்தேன். எனது மனதுக்கு நெருக்கமான நகரம் என்றால் அது சென்னை தான். இங்க எனக்கு கொடுத்த அங்கீகாரத்துக்காக சென்னைக்கு நான் சாகுற வரைக்கும் கடமைப்பட்டிருக்கேன். அதனால் இந்த ஊரை தப்பால்லாம் சொல்லவே முடியாது” என சென்னை மீதுள்ள அன்பை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஹீரோ.. வில்லன் என டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் தனுஷ்... நானே வருவேன் ரிலீஸ் அப்டேட் உடன் வந்த மாஸான போஸ்டர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories