பிரபல கன்னட நடிகர் சுந்தரின் மகளான மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் அர்ஜுனின் உறவிரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜாவை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.