இப்படத்தை முதலில் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்ததாம். அதனால் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்ட தனுஷ், நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டரில் நடிகை நயன்தாராவையும், ராஷி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகாவையும், பிரியா பவானி சங்கர் கேரக்டரில் சமந்தாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம்.