நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
24
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் காம்போ 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளதால் நானே வருவேன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா, எல்வி ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதில் நடிகர் தனுஷ் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
44
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் மாஸான இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரிலீஸ் குறித்த முக்கிய தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் ஹீரோ மற்றும் வில்லன் லுக் அடங்கிய அந்த இரண்டு போஸ்டர்களிலும் இப்படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீசாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தை செப்டம்பர் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.