திடீர் மாரடைப்பு... 41 வயதில் பிக்பாஸ் பிரபலம் மரணம் - சோகத்தில் திரையுலகினர்

Published : Aug 23, 2022, 11:17 AM ISTUpdated : Aug 23, 2022, 11:24 AM IST

வேலை விஷயமாக கோவா சென்றிருந்த பிக்பாஸ் பிரபலம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
திடீர் மாரடைப்பு... 41 வயதில் பிக்பாஸ் பிரபலம் மரணம் - சோகத்தில் திரையுலகினர்

இந்தியாவில் மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முதலில் இந்தி மொழியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது வரை இந்தியில் 15 சீசன்கள் முடிந்துள்ளன.

24

இந்நிலையில், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சோனாலி போகத் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்து பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 41. இவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்... மாநகரம் படத்தில் சென்னை மீதான வெறுப்பை காட்டியது ஏன்? - ரியல் லைஃப் அனுபவத்தை சொன்ன லோகேஷ் கனகராஜ்

34

கடந்த 2019-ம் ஆண்டு அரியானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். வேலை விஷயமாக கோவா சென்றிருந்த நடிகை சோனாலி போகத்துக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

44

நடிகை சோனாலி போகத்துக்கு யஷோதரா போகத் என்கிற மகளும் உள்ளார். நடிகை சோனாலி போகத்தின் கணவர் கடந்த 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். கணவரின் இறப்புக்கு பின்னர் மகளுடன் தனியாக வசித்து வந்தார் சோனாலி. பெற்றோரை இழந்து தவிக்கும் சோனாலி போகத்தின் மகளுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அட இன்னமும் மாஜி மாமனார் மீது பாசம் விட்டு போகலையே? சூப்பர் ஸ்டார் போஸ்டரை புகழ்ந்த தனுஷ்

click me!

Recommended Stories