விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டியுள்ள 'சோப்ரா' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.
28
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம், ஒரு வருடத்திற்கு மேல் தயாராகி வந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ஸ்பை த்ரில்லரான இந்த திரைப்படம், யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதோடு.. இதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்பதை சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது.
48
இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி நாயகியாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், மீனாட்சி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள 'சோப்ரா' படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது போலவே இந்த படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
68
சமீபத்தில் நடிகர் வீக்கம் உடல்நிலை பிரச்சனை காரணமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் கலந்து கொள்ளாத நிலையில், கோப்ரா இசை வெளியிட்டில் கலந்து கொண்டு ரசிகர்களை நிம்மதியடைய செய்தார்.
எனினும் விக்ரம் படக்குழுவினருடன் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்வாரா? என ரசிகர்கள் நினைத்த நிலையில், இன்று திருச்சியில் நடைபெற உள்ள கோப்ரா பட புரோமோஷனின் படக்குழுவுடன் கலந்து கொள்ள உள்ளார்.
88
இவரை தவிர, இந்த படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகை மிருணாளினி ரவி, மற்றும் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.