ஒளியே தோற்றுப்போகும் பேரழகு.. தெய்வச்சிலை போல் ஜொலிக்கும் சினேகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Published : Jan 23, 2024, 02:08 PM IST

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
19
ஒளியே தோற்றுப்போகும் பேரழகு.. தெய்வச்சிலை போல் ஜொலிக்கும் சினேகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் கதாநாயகிகளில் நடிகை சினேகா 2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்தவர். இவர் 2000-ம் ஆண்டு இங்கனே ஒரு நிலபக்‌ஷி என்ற மலையாள படத்தின் திரையில் அறிமுகமானார் .

29
se

இதை தொடர்ந்து தமிழில் சுசி கணேசன் இயக்குனராக அறிமுகமான விரும்புகிறேன் படத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமானார். ஆனால் இந்த படம் வெளியாக தாமதமானதால், அவர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த என்னவளே படம் சினேகாவின் முதல் தமிழ் படமாக மாறியது.

39

இதை தொடர்ந்து தமிழில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, பம்மல் கே சம்மந்தம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. 

49

இதனால் கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், ஸ்ரீ காந்த், தனுஷ், சிம்பு என அப்போது உச்சத்தில் இருந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் சினேகா.

59

ஒரு சில படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் சினேகாவின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. மேலும் தனது நடிப்புக்காக பிலிம்ஃபேர் உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

69

இதனிடையே 2009-ம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்ற த்ரில்லர் படத்தில் பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும் இருவருக்கும் காதல் ஏற்பட பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த க்யூட் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். .

79

தொடர்ந்து படங்களில் துணை கதாப்பாத்திரங்கள், கேமியோ ரோலில் நடித்து வருகிறார் சினேகா. அந்த வகையில் தற்போது விஜய்யின் அடுத்த GOAT படத்திலும் நடித்து வருகிறார். 

வெள்ளித்திரையில் கலக்கிய சினேகா தற்போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலக்கி வருகிறார். மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

89

திருமணமாகி குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் நடிப்பதை கைவிடாமல் திரை வாழ்க்கை, குடும்பம் இரண்டையும் கவனித்து வருகிறார் சினேகா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

 

99

அந்த வகையில் தற்போது கையில் விளக்குடன் ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்களும் குவிந்து வரும் நிலையில் உங்களுக்கு வயசே ஆகாதா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்

click me!

Recommended Stories