90களில் பல இளம் ரசிகர்களின் கனவு கனியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இயக்குனர் சபாபதி தேவசதேக்ஷின மூர்த்தி இயக்கத்தில் வெளியான, ரொமான்டிக் காமெடி திரைப்படமான 'விஐபி' படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சிம்ரன். இவர் நடித்த முதல் படமே சுமார் 100 நாட்கள் திரையரங்கில் ஓடியது மட்டுமின்றி, இவருடைய நடன அசைவுகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
இவர் முன்னணி ஹீரோயினாக இருந்தபோது இவர் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்தி. இவர் திரையுலகில் அடி எடுத்து வைத்த போது, நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான பிஸ்தா, சுந்தர பாண்டியன், ஹரிச்சந்திரன், ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் போன்ற பல ஹிட் படங்கள் வெளியானது.
எனவே நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்திலாவது, இணைந்து நடிக்க முடியாத என தன்னுடைய 20 வயதில் ஏங்கிய நடிகை சிம்ரனுக்கு, தற்போது 46 வயதில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடித்து வரும் 'அந்தகன்' படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளார்.
தாரை தப்பட்டை கிழிய... வெளியானது அஜித்தின் 'சில்லா சில்லா' பாடல்..!
மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை தியாகராஜன் இயக்க.. ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
26 வருடங்களுக்கு பின் நடிகை சிம்ரனின் ஆசை நிரைவேறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பாலிவுட் திரையுலகில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், கண்டிப்பாக தமிழில் இந்த படம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடி வரும் பிரஷாந்த் இந்த முறை வெற்றிக்கனியை ருசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வாவ்...சீரியல் நடிகை நீலிமாவின் குழந்தைகளா இது? செம்ம கியூட்... அசர வைக்கும் போட்டோஸ்!