"விஜயுடன் இணைத்து சர்ச்சை பேச்சு" கிளப்பிவிட்ட YouTube சேனல் - சும்மா லெப்ட் ரைட் வாங்கிய சிம்ரன்!

First Published | Sep 22, 2024, 11:05 PM IST

Actress Simran : தன்னை பற்றி அவதூறான கருத்து பேசியவர்களை எதிர்த்து, கட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை சிம்ரன்.

Vijay and Simran

மும்பையில் கடந்த 1976ம் ஆண்டு பிறந்த நடிகை தான் "ரிஷி பாலா நாவல்". இளம் வயதிலேயே மாடலிங் துறையில் பயணிக்க தொடங்கிய நாவல், கடந்த 1997ம் ஆண்டு தமிழில் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான வி.ஐ.பி என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அன்று முதல் தான் நாவல் என்கின்ற இயற்பெயர் கொண்ட அந்த நடிகை, சிம்ரன் என்ற பெயரில் வலம்வர துவங்கினார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகை சிம்ரனின் இடத்தை பிடிக்க இன்றளவும் இன்னொரு நடிகை வரவில்லை என்று கூறினால் அது சற்றும் மிகையாகாது. தமிழ் திரை உலகில் அறிமுகமான வெகு சில ஆண்டுகளிலேயே அஜித், விஜய் மற்றும் பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார் அவர்.

சிறுவர்கள் மீதான தாக்குதல்.. பாடகர் மனோ மகன்களுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீன் - முழு விவரம்!

Ajith and Simran

தளபதி விஜயின் "ஒன்ஸ்மோர்" மற்றும் "நேருக்கு நேர்" தல அஜித்தின் "அவள் வருவாளா" மற்றும் "வாலி" பிரசாந்தின் "கண்ணெதிரே தோன்றினாள்" என்று தொடர்ச்சியாக சிம்ரன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி கமல், விஜய், அஜித் மற்றும் பிரஷாந்த் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மிகப்பெரிய புகழுக்கு சொந்தக்காரராக மாறியவர் சிம்ரன்.

Tap to resize

Actress Simran

கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ச்சியாக படங்களில் இன்றளவும் சிம்ரன் நடித்து வருகிறார். குறிப்பாக இந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்கனவே அவர் நடிப்பில் அரண்மனை 4 மற்றும் அந்தகன் ஆகிய படங்கள் வெளியாகி உள்ள நிலையில், மேலும் 6 திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Simran Heated Statement

இந்த சூழலில் நடிகை சிம்ரன் தனது கணவர் தயாரிப்பாளராக களமிறங்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இதுகுறித்து வலைப்பேச்சு youtube சேனலில் ஒரு சர்ச்சை கருத்தும் வெளியிடப்பட்டது. அதாவது தன்னுடைய கணவர் தயாரிக்கும் திரைப்படத்தில், நடிகர் விஜய் நடிக்க சிம்ரன் அவரை அணுகியதாகவும். ஆனால் உங்களுக்கு ஏன் இந்த தயாரிப்பு வேலையெல்லாம் என்று விஜய் அவருக்கு அறிவுரை கூறியதாகவும் கூறப்பட்டது. 

இது குறித்து மிகவும் காட்டமான ஒரு பதிவை வெளியிட்டுள்ள சிம்ரன் "இப்படிப்பட்ட விஷயங்களை எப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு நாயகியாக என்ன சாதிக்க வேண்டுமோ அவை அனைத்தையும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சாதித்து விட்டேன். இப்போது என்னுடைய இலக்கே வேறு, என் குடும்பம் என் வாழ்க்கை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நான் வாழ்ந்து வருகிறேன். இனி என்னைப் பற்றி இப்படி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"அம்மா இயற்கை எய்தினார்".. பிரபல நடிகையின் மறைவு - வீடியோ வெளியிட்டு வருந்திய கமல்ஹாசன்!

Latest Videos

click me!