இந்த சூழலில் நான் கடந்த ஆண்டு இறுதியில் பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்பட பணிகளை சிம்பு தொடங்கினார். ஆனால் அப்பட பணிகள் தொடங்கிய சில மாதங்களிலேயே மேற்கொண்டு அந்த திரைக்கதை எந்தவித வளர்ச்சியும் பெறாமல் இருந்த நிலையில், பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் "தக் லைஃப்" என்கின்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக சிலம்பரசன் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் "தக் லைஃப்" திரைப்படம் சிலம்பரசனின் 48வது திரைப்படமாக வெளியாகும் என்றும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகின்ற படம் சிலம்பரசனின் 49வது திரைப்படமாக வெளியாகும் என்றும் முடிவு செய்யப்பட்டது.