வேள்பாரி நாவல்.. உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட கதை? - பெரிய பட்ஜெட் படத்துக்கு வார்னிங் கொடுத்த சங்கர்!
Ansgar R |
Published : Sep 22, 2024, 05:47 PM IST
Shankar Velpari : பிரபல இயக்குனர் சங்கர், வேள்பாரி நாவல் குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்றை இப்போது வெளியிட்டு இருக்கிறார். அவருடைய ட்விட்டர் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை பிரம்மாண்ட இயக்குனராக பயணித்து வருபவர் தான் சங்கர். பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அவர், கடந்த 1993ம் ஆண்டு தமிழில் வெளியான "ஜென்டில் மேன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார். தொடர்ச்சியாக அவருடைய இயக்கத்தில் வெளியான "காதலன்", "இந்தியன்", "ஜீன்ஸ்", "முதல்வன்", "பாய்ஸ்", "அந்நியன்", "சிவாஜி" மாற்றும் "எந்திரன்" என்று அனைத்து திரைப்படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது என்றால் அது சற்று மிகையல்ல.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிரம்மாண்டம் என்ற ஒரு சொல்லுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக கடந்த 31 ஆண்டுகாலமாக பயணித்து வருகின்றார் அவர்.
இயக்குனர் சங்கரை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை இயக்க குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு ஆண்டு காலம் இடைவெளியை எடுத்துக் கொள்வார். அதிலும் குறிப்பாக அண்மையில் வெளியான அவருடைய "இந்தியன்" படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 6 ஆண்டு கால உழைப்புக்கு பிறகு வெளியானது. இருப்பினும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்த திரைப்படம் பெரிய அளவில் சங்கருக்கு கை கொடுக்கவில்லை.
இதை தொடர்ந்து தனது முதல் தெலுங்கு திரைப்படமாக பிரபல நடிகர் ராம் சரணை வைத்து "கேம் சேஞ்சர்" என்ற திரைப்படத்தை இப்போது அவர் இயக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியன் திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் எதிர்வரும் 2025ம் ஆண்டு வெளியாக உள்ளது. அந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில் தான் இந்தியன் 2 திரைப்பட பிரமோஷனில் இருந்த பொழுது, "வேள்பாரி" என்கின்ற நாவலை திரைப்படமாக இயக்க தான் ஆசையாக இருப்பதாகவும், கொரோனா காலகட்டத்தில் தான் அந்த புத்தகத்தை படித்து மெய் சிலிர்த்ததாகவும் பேசி இருந்தார் சங்கர்.
34
Velpari Novel
சிபிஐ கட்சியை சேர்ந்தவர் தான் சு. வெங்கடேசன், இவர் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. நாவல்கள், புத்தகங்கள் மற்றும் கவிதை தொகுப்புகள் எழுதுவதில் சிறுவயது முதலிலேயே ஆர்வம் கொண்டிருந்த சு. வெங்கடேசன் "கலாச்சாரத்தின் அரசியல்", "கீழடி" "கதைகளின் கதை" மற்றும் "அலங்கார பிரியர்கள்" போன்ற பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
அதேபோல "காவல் கூட்டம்" மற்றும் "வீர யுக நாயகன் வேள்பாரி" போன்ற நாவல்களையும் எழுதி இருக்கிறார். இந்த சூழலில் விரைவில் அவரிடம் வேள்பாரி நாவலுக்கான உரிமத்தை பெற்று, அதை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க சங்கர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்ட.து இந்த சூழலில் அந்த நாவல் குறித்த ஒரு மிகப்பெரிய விஷயத்தை வெளியிட்டு இருக்கிறார் சங்கர்.
44
Shankar Copy Rights Issue
அவர் வெளியிட்ட தகவலின்படி "நவ யுக நாயகன் வேள்பாரி" என்கின்ற நாவலின் மொத்த உரிமமும் சு. வெங்கடேசன் அவர்களிடம் தான் இருக்கிறது. ஆனால் அந்த கதையின் அடித்தளமாக இருக்கும் பல காட்சிகள் அண்மையில் நான் கண்ட ஒரு திரைப்பட ட்ரெய்லரில் இடம் பெற்றிருப்பதை கண்டு மிகப்பெரிய வருத்தங்களுக்கு உள்ளானேன். இது எந்தவித அனுமதியும் இல்லாமல், அவரிடமிருந்து உரிமம் பெறாமல் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் என்பதை நான் அறிவேன். ஆகவே அந்த காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும் உடனடியாக அதை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்."
"அல்லது இந்த வேள்பாரி நாவல் சம்பந்தமாக சட்ட ரீதியான முறையில் என்னுடைய பணிகளை செய்யவேண்டியிருக்கும்" என்று கூறியிருக்கிறார். அவர் எந்த ஒரு திரைப்படத்தையும் குறிப்பிடாமல் அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரைலர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில், இன்று தான் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக உள்ள "தேவரா" திரைப்படத்தின் டிரைலர் வெளியானது குறிப்பிடத்தக்கது.