தந்தையுடன் தொடர்பு.! மகனோடு கல்யாணத்துக்கு ரெடியான சில்க் ஸ்மிதா.! நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்!

Published : Apr 17, 2026, 12:54 PM IST

Silk Smitha: இயக்குநர் வினு சக்ரவர்த்தி மூலம் 1979ம் ஆண்டு வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சில்க்'. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

PREV
16

தமிழ் திரையுலக வரலாற்றில் 'சில்க் ஸ்மிதா' என்ற பெயர் ஒரு நீங்காத அடையாளமாகும். வசீகரிக்கும் கண்கள், தனித்துவமான உடல்மொழி மற்றும் அபாரமான நடிப்புத் திறமையால் 80-களில் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். அதேபோல் ரொம்ப கிளாமராக நடித்தாலும் முகம் சுழிக்காத வகையில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களாலும் ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

26

ஆந்திர மாநிலத்தின் ஏலூரு பகுதியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. சிறு வயதிலேயே சென்னைக்கு வந்த அவர், மேக்கப் உதவியாளராகத்தான் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர் வினு சக்ரவர்த்தி மூலம் 1979ம் ஆண்டு வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சில்க்'. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அதுவே அவரது நிரந்தரப் பெயராக மாறிப்போனது.

36

பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்து, சில வருடங்களிலேயே பெரிய ஸ்டார் இமேஜை பெற்றவர் சில்க். பல ஸ்டார் ஹீரோக்கள் இவரின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடந்த காலங்களும் உண்டு. சில்க் ஸ்மிதா பெரும்பாலும் ஐட்டம் டான்ஸ் மற்றும் கிளாமர் ரோல்களில் நடித்தது அதிகம். இதுமட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதா ஐட்டம் டான்சராக இருந்த காலத்தில் ஸ்டார் கதாநாயகிகளை மிஞ்சும் அளவுக்கு சம்பளம் வாங்கியவர். காரணம் சில்க் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் என்கிற தகவலை கேள்வி பட்டாலே அந்த படத்துக்கு கூட்டம் அலைமோதும். இதுவே பெரிய நடிகர்களை இவருக்காக காத்திருக்க வைத்தது.

46

மிகவும் ஏழ்மையில் இருந்து, சினிமாவில் உச்சத்துக்கு சென்ற சில்க் ஸ்மிதா இளகிய மனசு காரணமாகவே பல ஏமாற்றங்களை சந்தித்தார். ஆண்களை நம்பி ஏமார்ந்து துரோகத்தின் வலியை ஏற்றுக்கொள்ள முடியால் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இவரது தற்கொலைக்கு பல்வேறு காரணங்களால் கூறப்பட்டாலும் காதலின் வலியும், துரோகமும் தான் உண்மையான காரணம் என கூறப்படுகிறது.

56

இங்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றது அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. இதை அவர் தனது தற்கொலை கடிதத்திலும் சில்க் ஸ்மிதா குறிப்பிட்டிருந்தார். ஆர்.எம்.பி மருத்துவரான ராதாகிருஷ்ணன், சில்க் ஸ்மிதா தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டார். சில்க் ஸ்மிதாவுக்கு ராதாகிருஷ்ணன் பல விதத்தில் உதவியாக இருந்தார். இதுவே அவர்கள் இடையே தொடர்பு ஏற்படவும் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

66

ஜெயசீலா கூறிய அதிர்ச்சி தகவல்

ஒரு கட்டத்தில் சில்க் சுமிதாவுக்கு, ராதாகிருஷ்ணனின் மகனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும்... எனவே ராதாகிருஷ்ணாவின் மகனை திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி கொள்ள சில்க் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், ராதாகிருஷ்ணனுக்கு இந்த விஷயம் தெரிய வந்த பிறகு அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட துரோகம் தான் கடைசியில் சில்க்கை தற்கொலை வரை கொண்டு சென்றது என்று ஜெயசீலா தனியார் டிவி பேட்டி ஒன்றில் தெரிவித்தது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories