தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷ்ரேயா. இப்படத்தில் அவர் நடிகை திரிஷாவுக்கு தோழியாக நடித்திருந்தார். இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் ஷ்ரேயா.
25
இதையடுத்து தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே வெற்றி அடைந்ததால் ஷ்ரேயாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் சிவாஜி திரைப்படம். ஷங்கர் இயக்கிய அந்த பிரம்மாண்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியக நடித்திருந்தார் ஷ்ரேயா.
35
இதையடுத்து விஜய் உடன் அழகிய தமிழ்மகன், விக்ரம் ஜோடியாக கந்தசாமி போன்ற படங்களில் நடித்த ஷ்ரேயா, கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த தனது காதலனான ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ஷ்ரேயா, கடந்தாண்டு ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர், அஜய் தேவ்கன் ஜோடியாக இந்தியில் திரிஷ்யம் 2 போன்ற படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தன.
55
ஒருபக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஷ்ரேயா. அந்த வகையில், அதில் தற்போது தொடையழகு முழுவதும் தெரிய படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தில் அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.