ஹீரோயினை போல் இருக்கும் மகளுடன்... மாடர்ன் ட்ரெஸில் கலக்கும் சரண்யா பொன்வண்ணன்! வைரல் போட்டோஸ்!

Published : Jul 27, 2023, 12:09 AM ISTUpdated : Jul 27, 2023, 12:14 AM IST

நடிகை சரண்யா பொன்வண்ணன், மகளுடன் வெளிநாட்டில் எடுத்து கொண்ட மாடர்ன் போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
16
ஹீரோயினை போல் இருக்கும் மகளுடன்... மாடர்ன் ட்ரெஸில் கலக்கும் சரண்யா பொன்வண்ணன்! வைரல் போட்டோஸ்!

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து கடந்த 1987-ம் ஆண்டு வெளியான 'நாயகன்'  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். முதல் படத்திலேயே உலக நாயகனுக்கு ஜோடியாக, அதுவும் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

26

பின்னர் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, மேளம் கொட்டு தாலி கட்டு, சிவப்பு தாலி, என அடுத்தடுத்த படங்களில்  படு பிஸியான நடிகையாக மாறினார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 

கொண்டாட்டத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம்..! தனம் - மூர்த்திக்கு குவா குவா.. என்ன குழந்தை தெரியுமா!

36

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தம்மா, பசும்பொன் ஆகிய படங்களில் நடித்தபோது, அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய, பொன்வண்ணனை காதலித்து 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகிய இவருக்கு , இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

46

தன்னுடைய குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்த இவருக்கு, அக்கா... அண்ணி.. அம்மா போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்து. ஒருநிலையில், ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக, இவர் நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுந்தந்தது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா தான் என சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார்.

என்ன சிம்ரன் இதெல்லாம்.? பிகினி உடையில் போஸ்ட் போட்ட 96 பட நடிகை கௌரி கிஷன்.. ஷாக்கான ரசிகர்கள்!

56

திரையுலகில் ஒரு பக்கம் பிசி என்றால் இன்னொரு பக்கம் ஃபேஷன் டிசைனிங் மூலம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் இவர், அவருடைய இரண்டாவது மகளுடன்... வெளிநாட்டில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது. 

66

இவரின் மகள்... சும்மா ஹீரோயினை போல் இருக்கிறார். அம்மா - மகள் இருவருமே மாடர்ன் உடையில் அவ்வளவு அழகு. சரண்யா - பொன்வண்ணனின் மூத்த மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Breaking: ரஜினிகாந்த், கமல் படங்களில் பணியாற்றிய பிரபலம் காலமானார்!

click me!

Recommended Stories