96 படத்தின் ஸ்கூல் பெண்ணாக அறிமுகமாகி, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கௌரி கிஷன், பிகினி உடையில் போஸ் கொடுத்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
த்ரிஷாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில், பள்ளி மாணவியாக நடித்து... ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்கான 'ஜானு' படத்திலும் சிறு வயது கதாநாயகியாக, சமந்தாவின் கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்வானந்த் விஜய் சேதுபதி ரோலில் நடித்திருந்தார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்திலும், சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கௌரி கிஷன். பின்னர் மலையாள திரையுலகில், 'அனுகிரஹீதன் ஆண்டனி' என்னும் படத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.
மேலும் ஒரே திரையில் இரண்டு படங்கள் ஓடும் படி எடுக்கப்பட்ட பிகினிங்... உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய 'பேப்பர் ராக்கெட்' போன்ற வெப் சீரிஸில் நடித்தார். ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி பொங்கும் சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.