டைட் ஜீன்ஸில்.... எடுப்பான பின்னழகை காட்டி!! இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் சமந்தாவின் வைரல் போட்டோ

First Published | Jan 24, 2022, 7:20 AM IST

டைட்டான ஜீன்ஸ் பேண்ட்டும், கருப்பு நிற டாப்பும் அணிந்து பின்னழகை காட்டியபடி பால்கனியில் நின்றவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எரிந்து விட்டு தங்களுடைய இலக்கை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் நடிகை சமந்தா, திருமணத்திற்கு முன்பை விட... திருமணதிற்கு பிறகு தான் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சுமார் 4 வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்திய சமந்தா... திரைத்துறையில் இருந்து விலகி, குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நேரத்தில் இருவருக்கும் இடையே வெடித்த கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிட்டது.

Tap to resize

இதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு தன்னுடைய கவலைகளை மறக்கடிக்கும் விதமாக... அவ்வப்போது சுற்றுலா, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, மற்றும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது என தன்னை பிசியாக வைத்து கொள்கிறார் நடிகை சமந்தா. இப்படி தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு சென்று கொண்டிருக்கும் சமந்தா, தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பனிச்சறுக்கு செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்தார் சமந்தா, அந்த வீடியோ மிகவும் வைரலானது.

இந்நிலையில், தற்போது டைட்டான ஜீன்ஸ் பேண்ட்டும், கருப்பு நிற டாப்பும் அணிந்து பின்னழகை காட்டியபடி பால்கனியில் நின்றவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, சில மணி நேரங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!