ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பிளான் ரெடி.... ‘தளபதி 66’ படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்

Ganesh A   | Asianet News
Published : Jan 24, 2022, 06:45 AM IST

தளபதி 66 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார்.

PREV
14
ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பிளான் ரெடி.... ‘தளபதி 66’ படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் (vijay). இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் நடிக்க அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

34

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார். அதன்படி தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக அவர் கூறி உள்ளார். திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தால் வருகிற தீபாவளி பண்டிகைக்கு படம் ரிலீசாகும் என்றும், ஒருவேளை கொரோனா காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். 

44

மேலும் கடந்த 20 ஆண்டுகளில் தான் கேட்ட சிறந்த கதை தளபதி 66 படத்தின் கதை தான் என தில் ராஜு கூறி உள்ளார். இவ்வாறு ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை மாஸ் அப்டேட்டை வெளியிட்டு, பக்கா பிளானுடன் களமிறங்கும் தளபதி 66 படக்குழுவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories