நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா கடந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலித்தார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்பாடலுக்காக படத்தை பார்த்தவர்கள் ஏராளம்.
படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, சம்பளத்தையும் அதிகமாக தருவதாக கூறி ஆட வைத்தாராம். அதன்படி இப்பாடலில் கவர்ச்சி நடனம் ஆட நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை சமந்தாவின் ஐட்டம் சாங்கிற்கு தெலுங்கு திரையுலகில் செம்ம டிமாண்ட் ஏற்பட்டு உள்ளதாம். அடுத்ததாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள லிகர் படத்தில் குத்தாட்டம் போட நடிகை சமந்தாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.