தளபதியின் பேவரைட் இயக்குனர் சொன்ன கதையை கேட்டு மெர்சலான அல்லு அர்ஜுன்!! உருவாகிறது மாஸ் கூட்டணி

Ganesh A   | Asianet News
Published : Jan 24, 2022, 05:34 AM IST

சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அடுத்ததாக தளபதியின் பேவரைட் இயக்குனருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
15
தளபதியின் பேவரைட் இயக்குனர் சொன்ன கதையை கேட்டு மெர்சலான அல்லு அர்ஜுன்!! உருவாகிறது மாஸ் கூட்டணி

தமிழ் திரையுலகில் இளம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. இவர், இயக்கத்தில் வெளியான முதல் படமான 'ராஜா ராணி' மணிரத்னத்தின் மௌனராகம் பட சாயலில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும், சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே... ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தி இருந்தார்.

25

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாருடன் கூட்டணி அமைப்பார், யாரை வைத்து படம் இயக்குவார்? என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து மெர்சல், பிகில், என தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து இயக்கி மாஸ் காட்டினார். 

35

தளபதி விஜய்யை வைத்து, இயக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என பெரிய இயக்குனர்கள் வரை ஏங்கி வரும் நிலையில் இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் ஜாக்பாட்டாகவே பார்க்கப்பட்டது. மேலும் தளபதி விஜய்யின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார் அட்லீ.

45

தற்போது, தமிழை தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா, ஹீரோயினாக நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். 

55

இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இயக்குனர் அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து கதை சொன்னாராம். அந்த கதை அல்லுவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். இதனால் புஷ்பா இரண்டாம் பாகத்துக்கு பின் அட்லீ உடன் அவர் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories