இதுதவிர சமந்தா நடித்துள்ள சரித்திர படமான சாகுந்தலமும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. குணசேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளிலும் தற்போது படு பிசியாக இயங்கி வருகிறார் சமந்தா.