வெள்ளை நிற சேலையில் தேவதை போல் வந்து பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை பிரியா பவானி சங்கரின் கியூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பேமஸ் ஆன நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
26
இதையடுத்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, யானை போன்ற படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
36
தற்போது இவர் நடிப்பில் பத்து தல திரைப்படம் தயாராகி உள்ளது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா. இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பத்து தல படம் ரிலீஸ் ஆன இரண்டே வாரங்களில் இவர் நடித்துள்ள ருத்ரன் படமும் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இப்படத்தை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
56
இதுதவிர ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். மேலும் எஸ்.ஜே.சூர்யா உடன் பொம்மை, அருள்நிதி ஜோடியாக டிமாண்டி காலனி 2, போன்ற படங்களும் இவர் கைவசம் உள்ளன.
66
இவ்வாறு பிசியான ஹீரோயினாக வலம் வரும் பிரியா, கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில், வெள்ளை நிற சேலையில், தேவதைபோல் வந்திருந்தார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.