நடிகர் விஜய் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றுமொரு ஹீரோ... ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்

First Published Mar 20, 2023, 11:15 AM IST

நடிகர் விஜய்யின் குடும்பத்தில் இருந்து தற்போது மேலும் ஒருவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. நடிகர் விஜய்யின் மாமாவான இவருக்கு சினேகா என்கிற மகள் இருக்கிறார். இவரும் தமிழில் சட்டம் ஒரு இருட்டறை என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவருக்கும் நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருமே காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டார்.

சினேகா பிரிட்டோவை திருமணம் செய்துகொண்டதை அடுத்து நடிகர் விஜய்யின் குடும்பத்தில் ஒருவராக இணைந்துவிட்ட ஆகாஷ் முரளி தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே இவரது சகோதரர் அதர்வா சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஆகாஷ் முரளியும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... மகன்களின் அன்புக்கு அடிமையான விக்னேஷ் சிவன் - நயன்தாரா... உயிர், உலகத்துடன் எடுத்த கியூட் போட்டோ வைரல்

அதன்படி ஆகாஷ் முரளி நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் ஆகாஷுக்கு ஜோடியாக நடிக்கப்போவது இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தானாம். கடந்தாண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி. தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

மாவீரன் படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்த உடன் விஷ்ணுவர்தன் படத்தில் அதிதி இணைவார் என கூறப்படுகிறது. ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தை அவரது மாமனார் சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்க உள்ளாராம். மாஸ்டர் படத்திற்கு பின் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மீண்டும் ஒரு ‘ராஜா ராணி’.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங் - நயன்தாராவின் 75-வது படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ

click me!